ராமநாதபுரம்

திருவாடானையில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது

DIN


திருவாடானை, சின்ன கீர மங்கலம் ஆகிய பகுதிகளில்  போலியாக மருத்துவமனை நடத்திய 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.  
திருவாடானையில் போலியாக மருத்துவமனை நடத்தி மருத்துவம் பார்ப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் திருவாடானை போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.   இதில் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்தி மருத்துவம் பார்ப்பது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து திருவாடானை வடக்குத் தெருவில் மருத்துவமனை நடத்திய அலாவுதீன் மனைவி ஷகிலாபானு (60), திருவாடானை பிடாரி கோவில் தெருவில் மருத்துவமனை நடத்திய பக்ருதீன் மகன் சிராஜுதீன் (45) மற்றும் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மருத்துவமனை  நடத்திய கருப்பணன் அம்பலம் மகன் சுவாமிநாதன் (77) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT