ராமநாதபுரம்

வகுப்பறை பற்றாக்குறையால் மரத்தடியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

DIN

கமுதி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடி நிழலில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் 198 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதியில்லாமல், 2 நாள்களுக்கு ஒரு முறை ரூ.300-க்கு, ஆசிரியர்கள் சொந்த செலவில் டேங்கர்களில் குடிநீரை விலைக்கு வாங்கி, பயன்படுத்தும் அவலம் உள்ளது. 
மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல், பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால், மாணவர்களுக்கு மரத்தடி நிழலில் வகுப்புகள் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் மாணவர்களுக்கு மரத்தடிகளில் வகுப்புகள் நடத்த முடியாத நிலையால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே போதிய வகுப்பறை கட்டடங்கள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT