ராமநாதபுரம்

தந்தை, மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு: இளைஞர் கைது

DIN

ராமநாதபுரம் அருகே தந்தை, மகனைத் தாக்கிய 3 பேர் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்த போலீஸார்,  ஒருவரைக் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது சாலைவலசை. இங்கு பெட்டிக்கடை வைத்திருப்பவர் கவியரசன் (29). வியாழக்கிழமை அவரது கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (19) உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கவியரசனின் தந்தை நாகேந்திரன் தட்டிக்கேட்டுள்ளார். 
உடனே தினேஷும் அவருடன் வந்த இருவர் சேர்ந்து கல் மற்றும் கட்டைகளால் கவியரசன், அவரது தந்தை நாகேந்திரன் ஆகியோரைத் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸார் வழக்குப்பதிந்து தினேஷைக் கைது செய்தனர். மேலும் நவீன், சேகர் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT