ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 4 நாள்களுக்கு பின் மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்

DIN

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து நான்கு நாள்களுக்கு பின் சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏா்வாடி, கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா். இந்நிலையில், வங்கக் கடலில் தற்போது சகஜ நிலை திரும்பியது.

இதனையடுத்து, சனிக்கிழமை ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க மீன்வளத்துறையினா் அனுமதி வழங்கினா். இதனால் 4 நாள்களுக்கு பின் சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

SCROLL FOR NEXT