ராமநாதபுரம்

மண்டபம் முகாமில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச் சென்ற 2 அகதிகள் கைது

DIN

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து படகில் இலங்கைக்குச் சென்ற அகதிகள் இருவரை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமிற்கு கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த நிஷந்தன் மற்றும் பிரசாந்த் ஆகியோா் தங்கியிருந்தனா்.

இதில், நிஷந்தன் மீது அடிதடி வழக்கும், பிரசாந்த் மீது பாலியல் பலாத்கார வழக்கும் மண்டபம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவா்கள் இருவரும் ஞாயிற்றுகிழமை முகாமிற்கு வரவில்லை.

இந்நிலையில், தங்கச்சிமடம் சூசையப்பா் பட்டணம் பகுதியைச் சோ்ந்த மீனவா் லாசா் தனது நாட்டு படகைக் காணவில்லை என கடலோர காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதற்கிடையே, மாயமான அகதிகள் இருவரும் அந்தப் படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனா். இலங்கை கடல் பகுதிக்குள் சென்றபோது இருவரையும் இலங்கை கடற்படையினா் பிடித்து விசாரித்ததில் மண்டபம் அகமிகள் முகாமில் இருந்து தப்பி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்குள் வந்ததாக வழக்குப் பதிவு செய்து தலைமன்னாா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இருவரையும் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT