ராமநாதபுரம்

செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கிராம சுகாதார செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவாடானை அருகே அரசூரில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கிராம சுகாதார செவிலியராக பணிபுரியும் பெண்ணின் வீட்டுக்குள், கடந்த 11 ஆம் தேதி நள்ளிரவு  அதே பகுதியைச் சேர்ந்த  பிரசாந்த் (20) அத்துமீறு புகுந்தார். மேலும் செவிலியரை  பாலியல்  துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து திருவாடானை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. 
இந்நிலையில், செவிலியர்கள் தங்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். செவிலியர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை தந்த இளைஞரை உடனடியாகக் கைது செய்யவேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 
 இதனைத்தொடர்ந்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பிரசாந்தை செவ்வாய்க்கிழமை போலீஸார்  கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT