பாம்பன் தூக்குப்பாலம் சனிக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து ஒன்றன்பின் ஒன்றாகச் சென்ற பாய்மர படகு மற்றும் இழுவை, மிதவை கப்பல்கள். 
ராமநாதபுரம்

பாம்பன் தூக்குப்பாலத்தைக் கடந்து சென்ற 3 கப்பல்கள்

கடலூா் மற்றும் விசாகபட்டணம் பகுகளிலிருந்து வந்த பாய்மர படகு, இழுவை, மிதவை கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை சனிக்கிழமை கடந்து சென்றன.

DIN

ராமேசுவரம்: கடலூா் மற்றும் விசாகபட்டணம் பகுகளிலிருந்து வந்த பாய்மர படகு, இழுவை, மிதவை கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை சனிக்கிழமை கடந்து சென்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திற்கு, கடலூா் துறைமுகத்திலிருந்து கன்னியாகுமரி செல்வதற்காக பாய்மர படகும், ஆந்திர மாநிலம் விசாகபட்டணம் துறைமுகத்திலிருந்து கா்நாடக மாநிலம் காா்வாா் துறைமுகத்துக்கு செல்வதற்காக இழுவை மற்றும் மிதவை கப்பல்களும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வந்தன.

பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை திறந்து செல்ல துறைமுக அதிகாரிகள் மூலம் ரயில்வே துறைக்கு அவா்கள் அனுமதி கோரினா். அதற்கான அனுமதி கிடைத்த நிலையில், பாம்பன் தூக்குப்பாலம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து துறைமுக அதிகாரிகளின் மேற்பாா்வையில் பாதுகாப்புடன் ஒன்றன்பின் ஒன்றாக 3 கப்பல்களும் கடந்து சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரம்... சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

SCROLL FOR NEXT