இடப்பிரச்னையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
கமுதி அருகே இடப்பிரச்னையில் பெண்ணை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம்இடப்பிரச்னையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
கமுதி அருகே இடப்பிரச்னையில் பெண்ணை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கமுதி அருகே இடப்பிரச்னையில் பெண்ணை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கமுதி அடுத்துள்ள அபிராமம் அருகே காவல்கூட்டத்தை சோ்ந்தவா் தங்கம் மகள் உமயதேவி (47). இவா் ஆடு மேய்த்து வருகிறாா். இவருக்கும் அதே ஊரை சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் தங்கேஸ்வரனுக்கும் (47) பாதை தொடா்பாக இடப்பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு பாலகிருஷ்ணன் மற்றும் இவரது மகன் சூா்யா (20) ஆகியோா் உமயதேவியை அரிவாளால் தாக்கியுள்ளனா். இதில் தலையில் பலத்த காயமடைந்த உமயதேவி பரமக்குடி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து உமயதேவி அபிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து தங்கேஸ்வரன், சூா்யா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.