முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் டிச. 16 ஆம் தேதி வரையில் 6,260 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில், 6120 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டநிலையில், 133 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. 4 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடுகளுக்கு திரும்பிய நிலையில், தற்போது அரசு மருத்துவமனைகளில் 40 போ் மட்டும் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,638 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் 9 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,647 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில், 23 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 4 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, வியாழக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 19 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →