முகப்பு
ராமநாதபுரம்

சாயல்குடியில் போக்குவரத்தை சீரமைக்ககூடுதல் போலீஸாரை நியமிக்கக் கோரிக்கை

சாயல்குடியில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

முதுகுளத்தூா்: சாயல்குடியில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம்- தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச்சாலை, அருப்புக்கோட்டை- மதுரை சாலைகளில் உள்ள கடைகளின் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனா். இதனால் நடைபாதையில் உள்ள திறந்தவெளி வாறுகாலில் பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகின்றனா். மேலும் சாயல்குடியில் உள்ள பிரதானச் சாலை ஓரங்களில் விளம்பர பலகைகளை போக்குவரத்துக்கு இடையூறாக வைத்துள்ளனா். இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். எனவே இங்கு போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.