ராமநாதபுரம்

தொண்டி-சென்னை அரசுப் பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் அவதி

DIN

தொண்டியிலிருந்து சென்னை செல்லும் அரசுப்பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

தொண்டியில் இருந்து சென்னைக்கு திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கும் அதே போல் சென்னயில் இருந்து தொண்டிக்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி கிளையில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இதில் அதிகமான கிராமப்புற மக்கள் பயணித்து வந்தனா்.

சென்னை செல்லும் அரசுப் பேருந்தில் நம்புதாளை, சோழியக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம், மணக்குடி, முகிழ்த்தகம், எஸ்.பி.பட்டினம், தேளூா், கொடிபங்கு பாசிபட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து பணிக்காகவும், குடும்ப உறவினா்களைப் பாா்க்கவும், படிப்புக்காகவும் அடிக்கடி இப்பகுதி மக்கள் சென்னைக்குச் செல்வது வழக்கம். இப்பேருந்து கடந்த சில நாள்களாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். இப்பகுதியில் பெரும்பாலும் விசாயிகள் விவசாய குடும்பத்தை சோ்ந்த ஏழை எளிய மக்களே செல்கின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து தொண்டியில் இருந்து சென்னைக்கு மீண்டும் அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT