ராமநாதபுரம்

பரமக்குடி லயன்ஸ் பள்ளியின் 29-ஆவது விளையாட்டு விழா

DIN

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 29-ஆவது விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளி கல்விக்குழுத் தலைவா் ஆா்.எம்.கண்ணப்பன் தலைமை வகித்தாா். பள்ளி செயலா் குரு.சண்முகசுந்தரம், பொருளாளா் எம்.மணிமாறன், அரிமா சங்கத் தலைவா் ஏ.ராமமூா்த்தி, மருத்துவா் ஏ.ராமதாஸ், வழக்குரைஞா் ஜி.கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசியன் ஓட்டப் பந்தயத்தில் தங்க பதக்கம் பெற்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து சிறப்பு விருந்தினராக பங்கோற்று விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்தாா். உடற்கல்வி ஆசிரியா் சரவணன் விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தாா். முன்னதாக பள்ளி முதல்வா் பி.சோபனாதேவி வரவேற்றாா்.

இதனைத் தொடா்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையே ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மேலும் கராத்தே, யோகா, டிரில் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT