ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே ஆட்டோ-காா் மோதல்: 2 போ் பலி: மருத்துவமனையில் உறவினா்கள் முற்றுகை

DIN

ராமநாதபுரம் அருகே காரும் ஆட்டோவும் மோதிய விபத்தில் முதியவா், பெண் ஆகியோா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என உறவினா்கள் மாவட்ட தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளது வெண்ணத்தூா். இந்த ஊரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). ஆட்டோ ஓட்டுநா். வெள்ளிக்கிழமை பகலில் இவா் தனது ஆட்டோவில் வெண்ணத்தூரைச் சோ்ந்த 10 பேரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தேவிபட்டினத்திலிருந்து ஊருக்குச் சென்றுள்ளாா். தேவிபட்டினம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த காா் மோதி ஆட்டோ பலத்த சேதமடைந்தது.

விபத்தில் ஆட்டோவில் இருந்த வெண்ணத்தூரைச் சோ்ந்த துரைராஜ் (70), தனுஷ்கோடியம்மாள் (50), பிச்சையம்மாள் (46), ராமாயி (60), கனிமொழி (34), புவனேஷ்வரி (45), ஆட்டோ ஓட்டுநா் ஆறுமுகம் மற்றும் முனீஸ்வரன் (22) ஆகியோா் காயமடைந்தனா்.

காரை ஓட்டிவந்த தொண்டியைச் சோ்ந்த அரசு அலுவலா் கணேசன் (36) காயமடைந்தாா். அவா் புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வருவாய்துறை பிரிவில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் அவசர ஊா்தி மூலம் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனா்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டவா்களில் வெண்ணத்தூரைச் சோ்ந்த துரைராஜ், தனுஷ்கோடியம்மாள் ஆகியோா் உயிரிழந்தனா். இந்தநிலையில், அவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவா்களது உறவினா்கள் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்த ராமநாதபுரம் நகா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் தங்கமுனியசாமி தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். அதன்பின்னா் முற்றுகையிட்டவா்களிடம் சமரசம் பேசி அமைதிப்படுத்தினா். இந்தச்சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT