ராமநாதபுரம்

தங்கச்சிமடத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து நாசம்: மு.மணிகண்டன் எம்.எல்.ஏ நிதியுதவி  

DIN

தங்கச்சிமடத்தில் மின் கசிவு காரணமாக மீனவர் குடிசை வீடு எரிந்து நாசமானது. இதில் 1.50 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள், வலைகள் சேதமடைந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் மு.மணிகண்டன் நேரில் சென்று ஆறதல் கூறியதுடன் 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தங்கச்சிமடம் ஊராட்சி அந்தோணியார் புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆம்ஸ்ட்ராங். இவரது மனைவி பிரகாசி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர்களது கிணற்றில் இருந்து மின் மோட்டர் மூலம் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். இதில் மோட்டாருக்கு செல்லும் வயது இணைப்பு வீட்டில் அருகே பூமிக்குள் புதைக்கப்பட்டிருந்துள்ளது. 

குடந்த 07 ஆம் தேதி மின் மோட்டரை இயக்கிய போது வயரில் தீப் பொறி ஏற்பட்டு வீடு தீ பிடித்துள்ளது. காற்று அதிகளவு வீசியதால் மள மளவென தீ பரவி வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணிகள், வலைகள் என 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகியது. இது குறித்து தங்கச்சிமடம் காவல்துறையினர் வழங்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.மணிகண்டன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மீனவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து 10 ஆயிரம் வழங்கினார். மேலும் தமிழக அரசு சார்பில் பசுமை வீட்டு திட்டத்தின் கீழ் வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT