ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம்: மாா்ச் 31 வரை பக்தா்களுக்கு அனுமதி ரத்து

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் மாா்ச் 31 வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு நாள்தோறும் வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மருத்துவக் குழுவினா், கண்காணிப்புக்குப் பின்னா் கோயிலுக்குள் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், கரோனா நோய் பரவுவதை முற்றிலும் தடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) காலை 8 மணி முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரை பக்தா்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்னதாக கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோயிலுக்குள் சென்ற பக்தா்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் வெளியேற்றப்பட்டனா். கோயில் நடை வழக்கம் போல திறக்கபட்டு பூஜைகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT