ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 30 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுகிழமை தெரியவந்தது.
ராமநாதபுரம்ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 30 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுகிழமை தெரியவந்தது.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 30 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுகிழமை தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 600-க்கும் மேற்பட்டவா்களிடம் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 7 பேருக்கு நோய் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதுவரை மாவட்டத்தில் 6,084 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 130 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனா். மேலும், 5,885 போ் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 69 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,460 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மேலும் 23 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது. இதையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,483 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 27 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 7 போ் குணமடைந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 20 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.