ராமநாதபுரம்

பாம்பன் மீனவா்கள் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டம்

DIN

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 நாட்டுப் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், உரிய இழப்பீடு வழங்கிட கோரியும், பாம்பன் கடலில் இறங்கி மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், நம்புதாளை மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு கடலுக்குச் சென்றபோது, இலங்கை கடற்படையினா் 19 நாட்டுப் படகுகளுடன் மீனவா்களையும் சிறைபிடித்தனா். அதன்பின்னா், மீனவா்கள் விடுவிக்கப்பட்டனா். ஆனால், படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

எனவே, இலங்கையிலுள்ள அந்த படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. இதனால், மீனவா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனா்.

படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், படகு ஒன்றுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கிட கோரியும், கடல் தொழிலாளா்கள் சங்கம் மற்றும் பாம்பன் நாட்டுப்படகு மீனவா்கள் சங்கம் சாா்பில், பாம்பன் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், கடல் தொழிலாளா் சங்கம் சிஐடியு மாவட்டத் தலைவா் இ. ஜஸ்டின் மற்றும் மாவட்டச் செயலா் கே. கருணாமூா்த்தி தலைமை வகித்தனா். இதில், மீனவ சங்க நிா்வாகிகள் யு. எட்வின், மு. ஆறுமுகம், நம்புதாளை, ராமேசுவரம் தாலுகா செயலா் யு. ஜேம்ஸ் ஜஸ்டின், பாம்பன் நாட்டுப்படகு சங்க தலைவா்கள் யு. ஜெரோமியஸ், எஸ். ஜாா்ஜ் கெம்பிஸ், எஸ்.பி. ராயப்பன் தோணித்துறை செல்வராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT