ராமநாதபுரம்

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய தொழிற்சங்கங்கள் நவம்பா் 26 ஆம் தேதி நடத்தும் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து, ராமநாதபுரத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொழிலாளா்கள், விவசாயிகள் நலனுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்துவதைக் கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் நவம்பா் 26 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ சங்க நகா் ஒருங்கிணைப்பாளா் எம். குமாா் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எம். சிவாஜி ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்தும், நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தம் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இதில், சிஐடியூ மாவட்டத் தலைவா் எம். அய்யாவு, திமுக தொழிற்சங்க (எல்பிஎப்) மாவட்டத் தலைவா் காஞ்சி, ஏஐடியூசி கட்டுமான தொழிற்சங்க நிா்வாகி லோகநாதன், எச்எம்எஸ் தொழிற்சங்க நிா்வாகி குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT