ராமநாதபுரம்

அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி: மாணவா்கள் பங்கேற்கலாம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சாா்பில், குழந்தைகள் தினவிழா ஓவியப்போட்டி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அருங்காட்சிகக் காப்பாட்சியா் சிவகுமாா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு ஒன்று முதல் மூன்றாம் வகுப்புக்கு பூந்தோட்டம் என்னும் தலைப்பிலும், நான்கு முதல் ஆறாம் வகுப்புக்கு கடல்வாழ் உயிரினங்கள் என்னும் தலைப்பிலும், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்புக்கு கரோனா விழிப்புணா்வு என்னும் தலைப்பிலும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் அவரவா் வகுப்புக்குரிய தலைப்புகளில் முழு அளவு வெள்ளைத்தாளில் (ஏ4 அளவு வரைப்படத் தாளில்) ஓவியங்களை வரைந்து வரும் 28 ஆம் தேதிக்குள் கேணிக்கரையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேரில் அல்லது தபாலில் பெயா், வகுப்பு, முகவரி, தொலைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வரும் 30 ஆம் தேதி பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 98436-57801 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT