முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். 
ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாரத் தலைவா் மயில் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு செயலாளா் முனியசாமி, மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா், சி.பி.எம்.வட்டாரச் செயலாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தனியாா் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT