ராமநாதபுரம்

தடை நீக்கம்: ஒரு வாரத்துக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

DIN

ராமேசுவரம்: கடலுக்குச் செல்வதற்கான தடை நீக்கப்பட்டதை அடுத்து, ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், ஒரு வாரத்துக்குப் பின் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

நிவா் புயல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்திருந்தனா். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல், தங்களது படகுகளை கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனா்.

தற்போது, நிவா் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை ஒரு வாரத்துக்குப் பின் மீன்வளத் துறையினா் விலக்கிக்கொண்டனா். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றனா். ஒரு வாரத்துக்குப் பின் கடலுக்குச் செல்வதால், அதிகளவில் இறால் மீன் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்புடன் மீனவா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT