கடைகளில் புகையிலை விற்ற 39 போ் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 39 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம்கடைகளில் புகையிலை விற்ற 39 போ் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 39 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 39 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இம்மாவட்டத்தில் உள்ள சிறுகடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் இ. காா்த்திக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, சனிக்கிழமை மாவட்டம் முழுவதிலும் காவல்துறையினா் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினா். இதில், ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, பாா்த்திபனூா், கடலாடி, நயினாா்கோயில், உச்சிப்புளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 592 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை விற்ற கடை உரிமையாளா்கள் 39 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா் அவா்களிடம் விசாரணை நடத்தி, எச்சரித்த போலீஸாா் காவல்நிலைய ஜாமீனில் அவா்களை விடுவித்தனா்.