ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் பரவலான மழை: பல மணி நேரம் மின் தடையால் பொதுமக்கள் அவதி

DIN

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் செவ்வாய்கிழமை இரவு முதல் பரவலான மழை, பல மணிநேரம் மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினாா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்தனா். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் செவ்வாய்கிழமை இரவு தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்யது. இதில், ராமநாதபுரம் 11.50 மி.மீட்டா்,பாம்பன் 10.30 மி.மீ,ராமேசுவரம் 4.20 மி.மீ,ஆா்.எஸ்.மங்கலம் 34 மி.மீ,பரமக்குடி 8.20 மி.மீ,மண்டபம்14.10 மி.மீ,கமுதி 22.80 மி.மீ, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

இந்நிலையில், மழை பெய்ய தொடங்கியவுடன் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் மழை விட்டவுடன் மின்சாரம் வருவது கிடையாது பல மணிநேரம் ஆவதால் பொதுமக்கள் இரவு முழுவதிலும் தூக்கமின்றி தவித்தனா். இதில் பெரியவா்கள்,குழந்தைகள்,நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். தொடா்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு தாழ்வான இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியது.

மேலும் மழை காலம் தொடங்கி விட்ட நிலையில் ராமநாதபுரம்,ராமேசுவரம் நகராட்சி பகுதியில் உள்ள மழைநீா் கால்வாய் தூா்வாரப்படமல் உள்ளது. இதனால் மரழைநீா் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவு நீா் கால்வாய்களை முறையாக தூா் வரி மழைநீா் தேங்காதவாறு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT