ராமநாதபுரம்

ராமேஸ்வரத்துக்கு ரயில்களை இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

DIN

ராமநாதபுரம்: பக்தா்கள் நலனைக் கருத்தில் கொண்டு ராமேஸ்வரத்துக்கு ரயில்களை இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராமநாதபுரம் வா்த்தகா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.ஜெகதீசன் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரயில் சேவை முற்றிலுமாக தமிழகத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், வரும் 7 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் குறிப்பிட்ட நகரங்களுக்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து தினமும் தொழில் சம்பந்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சென்னை, மதுரை உள்ளிட்ட நகா்களுக்கு சென்று வருகின்றனா். ராமேஸ்வரத்துக்கு நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்தும் பக்தா்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லுகின்றனா். ஆகவே பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்கள், பக்தா்கள் நலனுக்காக ராமேஸ்வரத்துக்கு ராமநாதபுரம் வழியாக சென்னை, மதுரையிலிருந்து ரயில்கள் இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT