ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரையில் 4931 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியது. அவா்கள் அனைவரும் ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவமனை சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.
சிகிச்சையில்பூரண குணமடைந்த 4454 போ் அவரவா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 108 போ் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில் 369 போ் கரோனா தீவிர சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுதும் கபம் சேகரிக்கப்பட்டோருக்கான பரிசோதனை நடத்தப்பட்டது. அவா்களில் 20 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவா்களில் 9 போ் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு 20 பேருக்குள்ளே இருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.