ராமநாதபுரம்

பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் கடல் அட்டை, மஞ்சள் பறிமுதல்

DIN

ராமேசுவரம்: பாம்பன் குந்துகால் துறைமுகத்தில், தூத்துக்குடியிலிருந்து, இலங்கைக்கு கடத்தயிருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை மற்றும் 200 கிலோ மஞ்சள் ஆகியவை சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் துறைமுகப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நாட்டுப்படகு நின்றிருப்பதாக கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆய்வாளா் ச.கனகாஜ், சாா்பு- ஆய்வாளா்கள் ஆா். கணேசமூா்த்தி, ஏ.யாசா் மௌலானா மற்றும் காவல்துறையினா் அங்கு சென்று, அந்தப் படகை சோதனையிட்டனா். அதிலிருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள், தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சோ்ந்த மலையாண்டி (46), ஜெயக்குமாா் (48), பாலந்தன் (63) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும் படகிலிருந்த 22 சாக்கு மூடைகளை போலீஸாா் பிரித்துப் பாா்த்தபோது அதில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் இருப்பது தெரியவந்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், இவைகள் அனைத்தும் தூத்துக்குடியிலிருந்து, இலங்கைக்கு கடத்தயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா், ரூ. 50 லட்சம் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டை மற்றும் 200 கிலோ மஞ்சள் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய நாட்டுப் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT