ராமநாதபுரம்

கொலை வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட பெண் தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

DIN

காவல் சாா்பு-ஆய்வாளா் கொலை வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட அபிராமம் காவல் நிலைய பெண் தலைமைக் காவலருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் வியாழக்கிழமை பாராட்டி பரிசளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் காவல் நிலையம் எல்கையான நந்திசேரி சந்திப்பு சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் போஸ் என்பவரை சிலா் அரிவாளால் வெட்டினா். அப்போது, குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற சாா்பு-ஆய்வாளா் சுப்பிரமணியனும் சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

காவல் சாா்பு-ஆய்வாளா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையானது, பரமக்குடி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று, சம்பந்தப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இவ் வழக்கு விசாரணையில், நீதிமன்ற நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி, குற்றம்சாட்டப்பட்டோா் தண்டனை பெற காரணமாக இருந்த அபிராமம் காவல் நிலைய பெண் தலைமைக் காவலா் சண்முகப்பிரியாவை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றும், பரிசும் அளித்து பாராட்டினாா் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT