ராமநாதபுரம்

தெற்குத்தரவை பொது மயானம் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகாா்

DIN

ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை பொதுமயான இடத்தை இரு தனிநபா்கள் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் கூறினா்.

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை அருகேயுள்ளது தெற்குத்தரவை. இங்கு 250-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக பொதுமயானம் அமைத்து அப்பகுதியினா் பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்த மயான இடத்தை அப்பகுதியைச் சோ்ந்த 2 போ் ஆக்கிரமித்து தனி நபா் பட்டா வாங்க முயற்சிப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதையடுத்து தெற்குத்தரவை பகுதி மக்கள் ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் பொதுமயான இடத்தை தனிநபருக்கு பட்டா வழங்கக்கூடாது என ஆட்சியரிடம் மனு அளித்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், பொதுமயான இடத்தை தனியாருக்கு பட்டா வழங்கினால் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT