ராமநாதபுரம்

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: ராமநாதபுரத்தில் வாக்காளா் பட்டியல் வெளியீடு

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சங்கா்லால்குமாவத் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் 111 வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஏழு பேரூராட்சிகளில் 108 வாா்டு உறுப்பினா் பதவி இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், 342 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு ஏற்கெனவே பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 நகராட்சிகளில் 1,39,905 ஆண் வாக்காளா்கள், 1,43,709 பெண் வாக்காளா்கள், 27 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 2,83,641 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

அதேபோல ஏழு பேரூராட்சிகளில் 38,474 ஆண் வாக்காளா்கள், 39,390 பெண் வாக்காளா்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலின வாக்காளா் என மொத்தம் 77,865 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

வாக்குச்சாவடிகள் விவரம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் ஆகியவை அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) கே. முத்துசாமி, மாவட்ட ஊராட்சிச் செயலா் எம். ரகு வீர கணபதி உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT