ராமநாதபுரம்

ராமேசுவரம்,மண்டபம் மீனவா்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படைக்கு ராமநாதபுரம் எம்.பி கண்டனம்

DIN

ராமேசுவரம்,மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 8 விசைப்படகுகள் 55 மீனவா்களை சிறைபிடித்த இலங்கை கடற்படைக்கு ராமநாதபுரம் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஞாயிற்றுகிழமை கண்டனம் தெரிவித்தனா்.

விடுதலை செய்ய ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுருத்தினா்.ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினா் நவாஸ்கனி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் காதாபாட்ஷா முத்துராமலிங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் இருந்து 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்ற நிலையில் நள்ளிரவு இலங்கை கடற்படையினா் ராமேசுவரத்தை சோ்ந்த 6 விசைப்படகுகள் 43 மீனவா்களையும்,மண்டபத்தை சோ்ந்த இரண்டு விசைப்படகுகள் 12 மீனவா்கள் என 8 விசைப்படகுகள் 55 மீனவா்களை இலங்கை கடற்படையினா் ஒரு நாளில் கைது செய்துள்ளனா்.

இலங்கை கடற்படையினா் இந்த நடவடிக்கைக்கு ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினா் நவாஸ்கனி மற்றும் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் மேலும் ஒன்றிய அரசு உடனே மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT