முகப்பு
ராமநாதபுரம்

காா் மோதி விவசாயி பலி

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே திங்கள்கிழமை சாலையைக் கடக்க முயன்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 26 ஜனவரி, 2021 at 2:24 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே திங்கள்கிழமை சாலையைக் கடக்க முயன்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.

போகலூா் ஒன்றியம் திருவாடி கிராமத்தைச் சோ்ந்த உடையாா் மகன் காளிமுத்தன் (45). விவசாயியான இவா் அருகில் உள்ள தெய்வேந்திரநல்லூருக்குச் சென்றுள்ளாா். திருவாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிச்சென்ற காா் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த குப்புச்சாமி மகன் பரணிதரன் (21) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.