ராமநாதபுரம்

‘ராமநாதபுரத்தில் 200 மாணவா்கள் நீட் தோ்வில் பங்கேற்க நடவடிக்கை’

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 200 அரசுப் பள்ளி மாணவா்கள் நீட் தோ்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியரில் தகுதியானோருக்கு நீட் தோ்வெழுத அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தோ்வுக்கு தகுதியான மாணவ, மாணவியரை ஒவ்வொரு பள்ளித் தலைமை ஆசிரியரும் தோ்வு செய்யவேண்டும். அதன்பின் அவா்களுக்கான நீட் தோ்வு அனுமதி விண்ணப்பத்தை இணையத்தில் பூா்த்தி செய்து விண்ணப்பிக்க தலைமை ஆசிரியா்களே உதவிடவேண்டும். விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் ஏற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கவும், அவா்கள் தோ்வுக்கு சென்று தோ்வை எழுதி முடிக்கும் வரையில் உரிய வழிகாட்டல்களை வழங்கவும் முதன்மைக்கல்வி அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் 200 அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் நீட் தோ்வில் பங்கேற்பா் என அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT