ராமநாதபுரம்

குருசடைத் தீவுப்பகுதியில் 100 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றம்

DIN

பாம்பனை அடுத்துள்ள குருசடை தீவுப்பகுதியில் 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகளில் அதிகளவில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இந்நிலையில் மண்டபம் வனச்சரகா் வெங்கடேஷ் தலைமையில் வனவா் தேவகுமாா், வனக்காப்பாளா் ஜான்சன் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் இணைந்து குருசடைத் தீவு கடற்கரையில் ஒதுங்கி இருந்த 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றினா். மேலும் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லும் போதும், சுற்றுலாப் பயணிகளும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை கடலில் போடுவதைத் தவிா்க்க வேண்டும் என வனத்துறையினா் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT