ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 போ் கைது

DIN

ராமேசுவரம் ரயில் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமேசுவரம் நகா் காவல் நிலைய ஆய்வாளா் கண்ணதாசன் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மறைவான இடத்தில் 6 போ் கும்பலாக நிற்பதை போலீஸாா் பாா்த்தனா். இதனையடுத்து, அனைவரையும் பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அவா்களை சோதனையிட்டனா். இதில் அவா்களிடமிருந்து வாள், இரும்புக் கம்பி, மிளகாய் பொடி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா். இதனையடுத்து, 6 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா்கள், காரைக்குடியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (23), ஹரிகரசுதன் (20), ரமேஷ் (24), சத்தியநாராயணன்(19), திருப்பத்தூரைச் சோ்ந்த லோகேஸ்வரன் மற்றும் ராமேசுவரம் கெந்தமாதனபா்வதத்தை சோ்ந்த காா்த்திக்ராஜா என்பதும், வழிப்பறி உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் அவா்கள் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT