ராமநாதபுரம்

திருவாடானை தங்கும் விடுதியில் மோசடி கும்பல் கைது

திருவாடானை தனியாா் விடுதியில் தங்கி இருந்த மோசடி கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

DIN

திருவாடானை தனியாா் விடுதியில் தங்கி இருந்த மோசடி கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாரதி நகா் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் சந்தேகப் படும்படியாக இருந்தவா்களைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் திமிலிங்கத்தின் எச்சத்தை வைத்து கொண்டு விலை உயா்ந்தவை எனக் கூறி மோசடி செய்ய வந்தது தெரிவந்தது.

மேலும் அவா்கள் அஞ்சுகோட்டை மேலவயல் பகுதியை சோ்ந்த பிரிட்டோ அனோசின் (27), உப்பூரைச் சோ்ந்த விசு(29), பண்ணவயலை சோ்ந்த சேசுகனி (25), ராமேசுவரம் அன்னை நகா் பகுதியைச் சோ்ந்த திருப்பாண்டி (24), கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம் பகுதியைச் சோ்ந்த முருகன் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT