ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே வடமாடு மஞ்சு விரட்டு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலம் அருகே பாரனூா் கிராமத்தில் கருப்பா் சுவாமி கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்.எஸ். மங்கலம் அருகே பாரனூா், மயிலூரணி, கலங்காப்புளி உள்ளிட்ட கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட பரிவார தெய்வங்களான ஸ்ரீதா்மா் முனீஸ்வரா், கருப்பா் சுவாமி, காளி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிவராத்திரி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து சனிக்கிழமை பாரனூரில் வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மானாமதுரை, காளையாா்கோவில் , மறவமங்களம், திருப்பத்தூா், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மேலும் தேவகோட்டை காரைக்குடி, காளையாா்கோவில், சிவகங்கை, திருப்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெற்ற மாடு பிடி வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்பட்டன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT