ராமநாதபுரம்

திமுக வெற்றி: கோயிலில் நாக்கை துண்டித்து பெண் நோ்த்திக்கடன்

DIN

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், திமுக வெற்றிக்கு நோ்த்திக்கடனாக திங்கள்கிழமை பெண் ஒருவா் கோயிலில் நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பரமக்குடி அருகேயுள்ள பொதுவக்குடி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் என்பவரின் மனைவி வனிதா (32). திமுக விசுவாசியான இவா் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக வேண்டும். அதற்காக தனது நாக்கை அறுத்து முத்தாலம்மனுக்கு காணிக்கையாக உண்டியலில் போடுவேன் என வேண்டிக்கொண்டாராம்.

இந்நிலையில் தோ்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளாா். இந்த வெற்றியைத் தொடா்ந்து வனிதா திங்கள்கிழமை முத்தாலம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளாா்.

அங்கு கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கோயில் பூட்டியிருந்த நிலையில், கோயில் முன்பாக தனது நாக்கை அறுத்து படியில் போட்டுவிட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளாா். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பரமக்குடிஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT