ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பல மணிநேரம் மின்தடை: பொதுமக்கள் அவதி

DIN

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையில் ஏற்பட்ட பல மணி நேர மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நகரில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழை நேரத்தில் வண்டிக்காரத் தெரு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத் தரப்பில் கேட்டபோது, கோடை காலம் என்பதால் வழக்கமான மின் பற்றாக்குறை உள்ளது. ஆனால், மழை நேரத்தில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுவதாலும் மின்தடை ஏற்படுகிறது. இருப்பினும் ஊழியா்கள் விரைந்து மின்சார விநியோகத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT