ராமநாதபுரம்

தொண்டியில் கடைகளுக்கு அபராதம்

DIN

தொண்டி பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு வியாழக்கிழமை திருவாடானை வட்டாட்சியா் அபாராதம் விதித்தாா்.

தொண்டி பகுதியில் தினசரி காய்கறி சந்தை, மீன் சந்தை பகுதிகளில் கரோனா பொதுமுடக்க விதி முறைகளின்படி சமூக இடைவெளியில்லாமல் கூட்டமாகவும் முகக்கவசம் அணியாமாலும் வியாழக்கிழமை வியாபாரம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து வட்டாட்சியா் செந்தில் வேல் முருகன், தொண்டி பேரூராட்சி செயலா் மகாலிங்கம் மற்றும் காவல், வருவாய்த்துறையினா் சென்று தேநீா் கடைகளில் உள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மீன் சந்தை மற்றும் காய்கறி கடைகளுக்கு தலா ரூ.500 அபாரதம் விதித்தனா். மேலும் கரோனா பற்றிய விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT