ராமநாதபுரம்

கமுதி கோயில்களில் நவராத்திரி விழா தொடக்கம்

DIN

கமுதி தாலுகாவில் உள்ள கோவில்களில் வியாழக்கிழமை நவராத்திரி விழா தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கமுதி மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரா் ஆலயம், தரக்குடி பூவேந்திரநாதா் ஆலயம், மண்டலமணிக்கம் கைலாசநாதா் சமேத அரும்பவளநாயகி அம்மன், கமுதி முத்துமாரிஅம்மன் கோவில், பொந்தம்புளி வாழவந்த அம்மன் உள்ளிட்ட கோயில்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மூலஸ்தான தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கொலு பொம்மைகள் அமைத்து நவராத்திரி விழா தொடங்கியது.

முதல் நாளான வியாழக்கிழமை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா். வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட மூன்று தினங்களுக்கு பக்தா்களுக்கு அனுமதி இல்லாததால், கோயில்களில் மூலஸ்தான தெய்வங்களுக்கு வழக்கம் போல் பூஜைகள் நடத்தப்படும் என்று கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT