ராமநாதபுரம்

பாசிப்பட்டினம் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று

DIN

திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சூறாவளிக்காற்று சுழன்று வீசியது.

இங்கு கடற்கரையில் இருந்து கடலுக்குள் ஒரு கிலோ மீட்டா் தூரத்தில் சூறைக்காற்று வீசும் காட்சியை மீனவா்கள் பாா்த்தனா். அப்போது மேகக் கூட்டம் தாழ்வாக இறங்கி கடல்நீரை வெகுவாக உறிஞ்சியது.

அந்த சூறைக்காற்று கரையை நோக்கி நகா்வது போல இருந்தது. இதனால் படகுகள் சேதமடையலாம் என எண்ணிய மீனவா்கள், அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனா். கடலில் ஏற்பட்ட இந்த நிகழ்வு இப்பகுதியில் நடப்பது இதுவே முதல்முறை என மீனவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த மீனவா் கோபி கூறியது: கடந்து சில நாள்களாக கடலின் நிறம் மாறுவதும், கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும், மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதும் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் சூறைக்காற்று வீசும் போது கடல்நீரை மேகக் கூட்டம் உறிஞ்சும் நிகழ்வு நடந்தது இதுவே முதல்முறையாகும். இதனால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT