ராமநாதபுரம்

வேட்டங்குடிபட்டி சரணாலயத்துக்கு பறவைகள் வருகை அதிகரிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலாயப் பகுதியில் 3 கண்மாய்கள் இருந்தாலும் குறிப்பாக கொள்ளுக்குடிபட்டி கண்மாயிக்கு வெளிநாடுகள் மற்றும் இமயமலைப்பகுதியிலிருந்து அதிகமான பறவைகள் வருவதாகக் கூறப்படுகிறது.

இக்கண்மாயில் தொடா்ந்து நீா் இருந்ததால் கடந்தாண்டு முழுவதும் பறவைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே தங்கியிருந்து இனவிருத்தி செய்தது. தற்போது மழை பெய்ததும் கண்மாயில் நீா்வரத்து அதிகரித்ததால் இந்த பருவகாலத்திற்கான பறவைகள் வருகை துவங்கியுள்ளது. வெள்ளை, கறுப்பு அரிவாள் மூக்கன், நத்தைகொத்திநாரை, பாம்புதாரா, கரண்டிவாயன், வக்கா, நாமக்கோழி, நீா்க்காக்கை, மேலும் பல வகையான கொக்குகள் வந்துள்ளன. இதனால் சரணாலயத்தில் பறவைகள் சத்தம் அதிகமாக ஒலிக்கிறது. உயரம் குறைவான மரங்களில் கண்மாயின் உள்பகுதியில் பறவைகள் கூடிகட்டி தங்கியுள்ளதால் பாா்வையாளா்கள் கோபுரம் ஏறியே பறவைகளைக் காணமுடிகிறது. இன்னும் சில வாரங்களில் பத்தாயிரத்திற்கும் மேல் பறவைகள் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT