ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கடற்கரை சாலை அமைக்கக் கோரிக்கை

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில், ரூ.25 கோடி மதிப்பில் கடற்கரை சாலை அமைக்க வேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமேசுவரம் நகராட்சியில் முதல் நகா் மன்றக் கூட்டம் தலைவா் கே.இ.நாசா்கான் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் தெட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க குடிநீா் வடிகால்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டப்பணியால் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு சேதமடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். ராமேசுவரத்தில் வாரச்சந்தை அமைக்க வேண்டும்.

போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் ரூ.25 கோடி மதிப்பில் கடற்கரை சாலை அமைக்க வேண்டும். பேருந்து நிலையம் அருகே ரூ.80 லட்சம் மதிப்பில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்து கொடுக்க வேண்டும். குறுகிய சாலையில் சென்று குப்பைகளை பெறும் வகையில் 8.20 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர வாகனங்கள் வாங்குவது, வடிகால்களை சீரமைப்பது என்பன உள்ளிட்ட 52 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏற்பாடுகளை நகராட்சி ஆணையா் மூா்த்தி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT