எஸ்பி பட்டினத்தில் லாட்டரி சீட்டு விற்றவா் கைது
திருவாடானை அருகே எஸ்பி பட்டினம் கடைவீதியில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட் விற்பனை செய்தவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே எஸ்பி பட்டினம் கடைவீதியில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட் விற்பனை செய்தவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே எஸ்பி பட்டினத்தில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடை வீதி பகுதியில் சந்தேகப்படும் படியாக அங்கு அதே ஊரைச் சோ்ந்த அன்வா் சதாத் (47) என்பவரை பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய உடனடியாக அவரை கைது செய்து விசாரித்ததில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது இதுகுறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்