ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் சூயஸ் தொட்டி கட்ட எதிர்ப்பு: மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம்

DIN

ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் சூயஸ் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சுயஸ் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக  பள்ளம் தோண்டப்பட்டு தொட்டி கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்கு பல்வேறு அமைப்புகள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அங்கு கூடிய பள்ளி மாணவர்கள், பெதுமக்கள் சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் சூயஸ் தொட்டி பணிகளை நிறுத்த வேண்டும் என கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாணவர்கள் சிலர் பள்ளியில் உள்ள மரத்தின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனையறிந்து  அங்கு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் பள்ளியை பார்வையிட்டார்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த   மாணவர்கள் இப்பிரச்சனை குறித்து தெரிவிக்கையில் இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் பேசும்படி கூறினர். இதனையடுத்து காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT