முகப்பு
ராமநாதபுரம்

கோயில் விழாவில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் பலி

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தில் ஸ்ரீவீரசக்தி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி

ஆவுடையாா்கோயில் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த மணிகண்டன் (24) மின் விளக்கும் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மின்கம்பியை எதிா்பாராமல் மிதித்து விட்டாா். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட மணிகண்டனை, அக்கம்பக்கத்தினா் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்தவா் மணிகண்டன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.