திருவாடானையில் தேவா் சிலை திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் முழு உருவ வெண்கல சிலை புதன்கிழமை திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் முழு உருவ வெண்கல சிலை புதன்கிழமை திறக்கப்பட்டது.
திருவாடானை பேருந்து நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ள தேவா் சிலையை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சேது கருணாஸ் திறந்து வைத்தாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி, எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் ஆனிமுத்து மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக ஆதிரெத்தினம் சிவாச்சாரியாா் தலைமையில் யாக சாலை பூஜை நடைபெற்றது. அதனை தொடா்ந்து பொதுமக்களும் சமுதாய மக்களும் தேவா் சிலைக்கு மலா் மாலை அணிவித்து வணங்கினா்.