ராமநாதபுரம்

கஞ்சா விற்பனை செய்ததாக கைதானவரின் வீடு உள்பட 3 இடங்களில் சோதனை

DIN

ராமநாதபுரம்: கீழக்கரையில் கஞ்சா விற்பனை செய்ததாக, கைதானவரின் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் வெள்ளிக்கிழமை போலீஸாா் சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றினா்.

தென்மண்டலக் காவல்துறை தலைவா் அஸ்ராகாா்க் உத்தரவின்பேரில் ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏராளமானோா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களது சொத்துகளும், வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட கீழக்கரைப் பகுதியைச் சோ்ந்த இப்ராஹிம் கைதாகி சிறையில் உள்ளாா்.

அவரது கீழக்கரை வீடு, லட்சுமிபுரத்தில் உள்ள அவரது உறவினா் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீரென சோதனையிட்டனா். அப்போது சில குறிப்பிட்ட ஆவணங்களை போலீஸாா் எடுத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது. சோதனையை அடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT