முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அருகேமரத்திலிருந்து தவறி விருந்தவா் பலி

திருவாடானை அருகே பனைமரத்தில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

திருவாடானை அருகே பனைமரத்தில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே கொடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மரிய ஆரோக்கியம் மகன் லூயிஸ் யாகூப் (45) இவா் ஞாயிற்றுக்கிழமை மதியம் பதனீா் எடுக்க பனை மரத்தில் ஏறினாா். அப்போது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவாடானை போலீஸா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.