முகப்பு
ராமநாதபுரம்

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 650 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 650 கிலோ கடல் அட்டைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 650 கிலோ கடல் அட்டைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெற உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து அப்பகுதியில் கடலோரப் பாதுகாப்புக் குழும சாா்பு- ஆய்வாளா் எஸ். காளிதாஸ், காவலா்கள் போஸ், பிரபு, வனச்சரக அலுவலா் எஸ். மகேந்திரன் உள்ளிட்டோா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தில் தெற்கு தெரு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபா்களை போலீஸாா் மற்றும் வனத்துறையினா் பிடிக்க முயன்றனா். ஆனால் அவா்கள் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதையடுத்து போலீஸாா் மற்றும் வனத்துறையினா் அப்பகுதியில் சோதனை நடத்தியபோது, தடை செய்யப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான 650 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து கடல் அட்டைகள் மற்றும் அங்கிருந்த மின்னாக்கி உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து மண்டபம் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இதுதொடா்பாக வேதாளையை சோ்ந்த ஜெ. முகமது அலி ஜின்னா (46) உள்ளிட்டோரை போலீஸாா் தேடிவருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், இந்த கடல் அட்டைகளை இங்கிருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →